Friday, September 14, 2012

அன்பே உனக்காக...........

காலங்கள் நம்மை கலக்கப்படுத்தினாலும்
நாம் கலங்காமல் கருத்திருக்கிறோம்
ஆனால் நம்மை சுற்றியுள்ள
நமது விசுவாசிகளின் பார்வையில்
நாம் இன்னும் பரிதாப்பத்துக்குரியவர்களாக 
நம்மை காயப்படுத்துபவர்களாக தான்
இருக்கிறார்கள்...........
இந்த கடவுளுக்கும் நம் மேல்
கருனையில்லை என்று தான் சொல்ல வேண்டும்
இல்லை என்ற நம்மை இப்படி
காத்திருக்க செய்து வேடிக்கை பார்பானா?

பதிவு

இதில் நான் பதிவு செய்து பல நாட்கள் ஆனது..........

நிண்ட இடைவெளிக்கு பின்  என் வலைதளத்தில்

எதைப்பதிவது  எதை விடுவது
பதிவுகள் எல்லாம் நாளை நாம் திரும்பி பார்க்கும் போது அவை நமக்கு சுகமான நினைவை மட்டும் தரவேண்டும் என்பது அல்ல நம் பதிவை மற்றவர்கள் பார்த்தாள் அதற்கு ஒரு நல்ல பின்னுட்டாம் தரவேண்டும்.
இதனாலே எனது பதிவுகளை நான் சரியான முறையில் பதிய ஆசைப்பட்டு பதியாமலே போகிறேன் .

என் வலைப்பூக்களில் பெறும்பாலும் என்னவள் பற்றி தான்  இருக்கின்றன....
சில பதிவுகள் நான் ரசித்தவைகளும் இதில் இடம் பெறுகின்றன.

மீண்டும் என்னவளுக்காக இதில் எழுத நினைக்கிறேன்
இதில் தவறு இருந்தால் மன்னிக்கவும்

Wednesday, May 16, 2012

சத்தியாவின் 'நிசப்தம்': 12 - கருகிப் போனாயோ…?

சத்தியாவின் 'நிசப்தம்': 12 - கருகிப் போனாயோ…?: என் வீட்டு ஜன்னலோரத்தில் துளிர் விட்டுத் தளைத்த அந்த ரோஜாச் செடியில் மனதைப் பறிப்பதாய் அழகாய் இரு பூக்கள்...! புதிய உலகைக் காண பூரிப்பாய் மீ...

Thursday, March 22, 2012

அம்மா

என்னை சுமையாக நீனைக்காமல்
சுகமாக சுமந்தவள் நீ
உன்னை தவிர என்னை நன்கு புரிந்தவர்கள்
யாரும் இல்லை .........
உன்னாலே இந்த பூமியில் நான் பிறந்தேன் ......
ஏன் வாழ நாளில் உனக்கு சேவை
செய்வதையே பெருமையாக நீனைக்கிறேன்
உன் உயிர் தந்து என்னை இன்றவள் நீ
உனக்காவே நான் வாழ்கிறேன்

என்கிறாய்…. ஏங்குகிறேன்….

என்னுடையது அனைத்தும்
உன்னுடையது என்கிறாய்….
உன்னை மட்டும்
என்னுடையது என்கிறாய்….
‘லூசு,
இது தான் காதல்’ என்கிறாய்…



-o0O0o-



உனக்காக
மீசைத் தியாகம் செய்தவனிடம்
”மடையா…
குத்துது’னு தான சொன்னேன்
வலிக்குது’னு எப்போ சொன்னேன்?”
என்கிறாய்…..



-o0O0o-



உன்னையே எப்போதும்
நினைக்கும் இதயத்தை
காயப்படுத்துவது ஏன்
என கேட்டால்,
‘இது உள்ளிருப்பு போராட்டம்’
என்கிறாய்…..



-o0O0o-



‘பேசாத போ’ என்கிறாய்….
திரும்பி அழைத்து
‘நான் கோபமா இருக்கேன்’
என்கிறாய்…..
மறுபடியும் அழைத்து
‘ஏன்டா கூப்ட மாட்ற?’
என்கிறாய்…..



-o0O0o-



இந்த
இன்ப இம்சையில்,
என்கிற’தெல்லாம்
நீ….
ஏங்குகிறதெல்லாம்
நான்….

-o0O0o-

உனக்காக

வேண்டும் தெய்வம்

வெவ்வேறாயினும்,

வேண்டுவதெல்லாம்

உன்னை மட்டுமே….

—-

நான் செய்யும் எதுவும்

உனக்காக,

நகம் வெட்டுவது உட்பட….

—-

ஆயிரம் இருக்கலாம்

உறவாய் உனக்கு….

ஆயினும் உயிராய்

நீ மட்டும் எனக்கு….

—-

எனை சுற்றி சூழ்ந்திருக்கிறாய்

பிரபஞ்சம் நிரப்பும்

காற்றைப் போல….

ஒவ்வொரு நொடியும் உணர்கிறேன்

உன் இருத்தலை

சுவாசம் போல….

—-

உன்னாலேயே
என் பொறாமை தீ
எல்லைமீறி எரிகிறது….
நீ இதழ் பதிக்கும்
நீர் குவளைமீது கூட….

என் வலி உணர்….








வட்டிலிலிட்ட சோறு
வாயில் படாமல்
வாடி வதங்கிப்போகிறேன்
‘வா சாப்டலாம்’ என்ற
வார்த்தை நீ தராமல்…..



சிரிக்க மறந்து
சிந்தனை மறந்து
சிதிலமடைந்து போகிறேன்
சின்ன சின்ன சண்டை
எதுவுமில்லாமல்…..



அலைபேசியும்
ஆதரிப்பாரின்றி
அநாதையாகிப் போகிறது
‘அமு’ என்றவுன்
அழைப்பு வராமல்…..



எதிர்படுபவர்கள்
ஏதேனும் கேட்குமுன்
எச்சரிக்கையோடிருக்கிறேன்
எப்போதும் போல நீ
என்னருகே இல்லாமல்…..



ஒருநாளும் ஒருபொழுதும்
ஒரு பயமும், கவலையும்
அணுகாது காத்தாய்
அது பொய்த்துப்போயின்
போவேன் ஒன்றுமில்லாமல்…..



நானாய் வேண்டிக்கொண்ட இப்பிரிவு
வானாய் நீண்டு போக பூமிக்கு
வீணாய் வாழ்கிறேன் - அன்புகூர்ந்து
காணாய் என்அகதி நிலை…

Wednesday, March 21, 2012

பெண்

இந்த ஒரு வார்த்தைக்கு தான் எத்தனை
வசீகரம் இருக்கு ..........
ஒரு ஆண் தான் வாழ நாளில்
அவன் சந்திக்கு பெண்
முதலில் தாயாக , சகோதரியாக ,
தோழியாக , காதலியாக ,
மனைவியாக ,இப்படி அவன் சந்திக்கும்
அதனை பெண்களும் அவனுக்கு
சரியாக அமைந்துவிட்டால்
அவன் வாழக்கையில்
உயர்ந்த இடத்திற்கு சென்றுவிடுவான் ........
இதில் எதாவது ஒன்று சரியாக அமையாவிட்டாலும்
அவன் வாழக்கையில் எத்தனை
சோகம் நீரைந்ததாக இருக்கும்
என்பதை உணர்ந்தவனுக்கு தான் தெரியும் .........
அதனால் பெண் என்பவள்
போற்றி பாதுக்காக வேண்டியவள்
நல்ல குணமுள்ள பெண்களை போற்வோம் .............
நல்ல பெண்ணை காதலிப்போம் .........
கல்யாணம் செய்வோம் ............




--
dhinakaran
9788659283

Saturday, February 18, 2012

காதலா நட்ப

உனக்கும் எனக்குமான இடைவெளி
குறைந்து கொண்டே போகிறது
இது தான் காதலா!
இன்னும் கூட நான் சொல்லவில்லை என் காதலை
உன்னிடத்தில் !
காதலா நட்ப என்று வரும் போது என் காதலை விட
உன் நட்பே எனக்கு பெரியது!

Monday, January 23, 2012

பிரிவு

பிரிவு - இன்னும் உறவுகளை நெருக்கமாக்குகிறது
பிரிவு - சொந்தங்களை அழகிய கவிதையாகுகிறது
பிரிவு - அன்பை புரிய வைக்கிறது....
பிரிவு - நினைவுகளை உங்கள் மீது குவிக்கிறது
பிரிவு - அதனால் நம்மை த்யானிக்க வைக்கிறது
பிரிவு - பிரிந்தவரின் மதிப்பை சொல்கிறது
பிரிவு - சந்திக்காமலேயே சந்தோசிக்க வைக்கிறது
பிரிவு - சரிவு அல்ல - வாழ்வில்
பிரிவு - செறிவு எனப் புரிந்து கொள்வோம் ...
பிரிவு - அழ வைக்கிறதா ? அப்போது
பிரிவு - அழகான நம் விழிகளை சுத்திகரிக்கிறது
பிரிவு - மிக மிக அழகானது எனவே
பிரிவோம் - சந்திப்போம்....!

naan thedum - duet karaoke for male singers with lyrics ( sang, made by ...

உன்னை புரிந்துகொள்ள் முடியவில்லை
எதிலும் எப்பொதும்!
உன்னை நன்கு புரிந்தவன்
நான் தான் என்று நீனைத்தேன் !!
என் நீனைப்பை பொய்யாக்கி போகின்றாய் ...........
எது , என்ன , என்பது புரியாமல் நான் ??????????????????
அன்பே உனக்காக !
நான் நூறு முறை கவிதை
எழுதினாலும் நான் எழுதிய
முதல் கவிதை ...............
உன் பெயர் தான் !

அன்பே !

எண்ணத்தில் உதிர்ந்தவள நீ !
என் உள்ளத்தில் வளர்ந்தவள நீ !!
உள்ளத்தில் உள்ளதையெல்லாம் அன்பே !
உன்னிடம் சொல்லுகின்றேன் ........
நான் உன்னிடம் சொல்லுகின்றேன் ........
எத்தனை நாட்கள் நாம் அன்பே !
நீனைந்து நிலைத்திருப்போம் அத்தனை
காலங்களும் நான் அன்பே உன்னுடன் வாழந்திருபேன் !!
காலங்கள் கடந்தாலும் நாம் காதல் கடப்பதில்லை .....
நாட்கள் நன்மை பிரித்தாலும் அன்பே !!!
நாட்கள் நமக்கு இல்லை.....
வாதங்கள் நம்மில் இருந்தாலும்
வாக்கு மாறியதில்லை ..............
என் உள்ளத்தில் நீ இருப்பதனால்
என் உயிருக்கு மரணம் இல்லை .................

BEST TAMIL SONG OF THE YEAR - 2009