Saturday, July 31, 2010

ஏமாற்றம்

எப்பொழுதும் திரும்பாதவள்
நேற்று திரும்பி என்
மனதில் பூக்கள் பூக்க செய்தால்

அந்த சில நொடிகளால்
என் மனது பட்டாம்பூச்சியாக மாறியது

அதே மகிழ்ச்சியில் இன்றும்
காத்திருந்தேன்

நேரம் கழிந்தது
கண்கள் கலைப்படைந்தது
இதயம் கனத்தது

திரும்பிவர மனம் இல்லாமல்
திரும்பி பார்த்தேன்
ஏமாற்றம்

மனதை விட்டுவிட்டு
உடல் மட்டும் வீடு வந்தது

No comments:

Post a Comment