முடியுமா? முயற்ச்சியுடன்....
ஆயிரம் ஆயிரம் காரணங்கள் உண்டு பெண்ணே
நான் உன்னை விரும்பியதற்கு!!
இதுவரையிலும் ஒரு காரணம் கூட தெரியவில்லையடி
நீ என்னை வெறுத்ததற்க்கு!!
என் இமைகள் மூடித்திறக்கும் நேரத்தில்
உன் திருமணம் நடந்ததாடி!!
ஏன் இன்னும் என் கண்கள்
உன் நிழல்களையாவது பார்க்கமுடியுமா?
என அங்கும் இங்குமாய் அலைபாய்கிறது!!!
என் உதடுகள் சொல்கிறது
அட மடைய அவளுக்கு திருமணம் ஆகிவிட்ட்தென்று!!
ஏன் இன்னும் என் இதயத்திற்கு
தெரியவில்லை!!! புரியவில்லை!!!
காலமெல்லாம் நான் உன்னை
பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும்!!
என்று நான் உன்னோடு சொல்லியிருக்கிறேன்!!
அதற்காவா என் தெரு அருகே குடிவந்தாய்
உன் கணவனுடன்!!!!
ஆண்டுகள் இரண்டரை ஆகிவிட்டது
இன்னும் சில மாதங்களில் உன் குழந்தை
என்னை பார்த்தால் ”அங்கிள்” என்று சொல்லும்!!!
ஆனாலும் பெண்ணே !!
இன்றும் என்னோடு உன் நினைவுகள்..........!
உன்னை இப்போது கனவில் நினைப்பதை கூட
இந்த சமுதாயாம் ஏற்றுக்கொள்ளாது..........
அது இயற்க்கையின் நியதியே!!!!!
அதனால் பெண்ணே!!
உன்னை பற்றிய நினைவுகளை
சற்றே தூரத்தில் வைத்து பழக ஆரம்பித்திருக்கிரேன்.....
நினைவுகள் நிழல்களாக மாறி
உச்சி (நடுமதியம்) வெயிலின்!!
நிழல்களாக மாறுமா? என்று தெரியாது!!
இருந்தாலும் முயற்சிகிறேன்!!!!!!
No comments:
Post a Comment