உன்னால் மட்டுமே
என் அருகில்
உறங்கிக்கொண்டே
கனவில் வர முடியும்....
உன்னால் மட்டுமே
என் கண்ணீரிலும்
இன்பம் உணர்த்த முடியும்....
உன்னால் மட்டுமே
என் கவலையில்
இதம் கொடுக்க முடியும்.....
உன்னால் மட்டுமே
என் வாழ்விற்கு
வரம் தர முடியும்....
உன்னால் மட்டுமே
என் சாவிற்கும்
பொருள் சொல்ல முடியும்....
உன்னால் மட்டுமே
என் காதலுக்கு
அமரம் அளிக்க முடியும்....
No comments:
Post a Comment