நீண்ட நாட்களுக்கு பிறகு ............... நண்பனுடன்
நீயும் நானும்
கால ஓட்டத்தில் கரைந்துபோனோம் !
எங்கு எதை தேடி
நம்மை தொலைத்தோம்
தெரியவில்லை!
நம் அருகில் இருந்தும்
காணாமல் போனது நம் நினைவுகள்!
இன்று நீ என் அருகில்
நம் நினைவுகளோ நீண்ட தூரத்தில் !
பழைய நினைவுகளை துரத்தி பிடித்துக்கொண்டியிருக்கிறோம் !
நம் பேசி பழகி இருந்த நாட்களை
மனதில் அசை போட்டுக்கொண்டு